ஆந்திர மாநில வேட்பாளருக்கு 18 மாத சிறை

ஆந்திர மாநில வேட்பாளருக்கு 18 மாத சிறை

1 mins read
8e220033-ac36-4e2e-9abe-7ae52603ab32
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (ஜெகன் கட்சி) வேட்பாளர் தோட்டா திருமூர்த்திலு. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் மண்டபேட்டா மக்களவைத் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (ஜெகன் கட்சி) வேட்பாளர் தோட்டா திருமூர்த்திலுவுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் தலித்துகள் ஐவர் அவமானப்படுத்தப்பட்டனர்.

தற்போதைய வேட்பாளரும் மேலவை உறுப்பினருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட 6 பேர் மீது தலித் வன்கொடுமைப் பிரிவின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலித்துகள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் உண்மைதான் என்றும் தோட்டா திருமூர்த்திலு உட்பட 6 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தலித் கூட்டமைப்பினர் விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

குறிப்புச் சொற்கள்