பாஜக வென்றால் இந்திய வரைபடம் மாறும்: நிர்மலா சீதாராமனின் கணவர்

பாஜக வென்றால் இந்திய வரைபடம் மாறும்: நிர்மலா சீதாராமனின் கணவர்

1 mins read
d2a6da76-afa0-490a-ab3d-c20d8b6a4fd5
பொருளியல் நிபுணரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளியல் நிபுணருமான பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தலே நடக்காது. இந்தியாவின் வரைபடம் மாறும்.

“மணிப்பூர், லடாக் பிரச்சினை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான்.

“இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்