மும்பையில் ‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி

மும்பையில் ‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி

1 mins read
f335781e-9a6c-4479-9b43-6c758e03d16c
‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி குறித்து பேசும் ஹீனா கவுசர் ராத். - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

மும்பை: சமூக ஊடகங்களில் உணவு பிரியர்களை கவர்வதற்காகவே புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து காணொளிகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்ஸ்டகிராமில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் மும்பையை சேர்ந்த ஹீனா கவுசர் ராத் என்ற பெண் தயாரித்த ‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி தற்போது பிரபலமாகி வருகிறது.

காணொளியில் ஹீனா ஒரு பாத்திரத்தில் நீல நிற பிரியாணி வைத்துள்ளார். பிரியாணியின் மேல் வெள்ளை வலை போன்ற வடிவங்களால் அலங்கரிக்கபட்டுள்ளது. ஹீனா, பிரியாணியின் பகுதிகளை வெளியே எடுக்கும்போது வலைகள் முழுவதுமாக சாப்பிடும் வகையில் இருப்பதாக விளக்குகிறார். பின்னர் சுவைக்காக ஹீனா அதில் மேலும் சில கலவைகளை சேர்க்கிறார்.

இந்த ‘ஸ்பைடர் மேன்’ குறித்த காணொளியைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலதரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஹீனா ஏற்கெனவே பார்பி நிறத்தில் உணவுகளை தயாரித்து சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்தார்.

குறிப்புச் சொற்கள்