விவசாயி உயிரிழப்பு என் இதயத்தை நொறுக்கிவிட்டது: ராகுல் காந்தி

விவசாயி உயிரிழப்பு என் இதயத்தை நொறுக்கிவிட்டது: ராகுல் காந்தி

1 mins read
ad5271ee-8edf-4e33-b628-1e50a20ba503
ராகுல் காந்தி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: பஞ்சாப்-ஹரியானா எல்லையில் புதன்கிழமை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார்.

இதை வன்மையாகக் கண்டித்துள்ள விவசாய அமைப்புகள், தற்போதைய நெருக்கடிக்கும் உயிரிழப்புக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில், விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“கானவுரி எல்லையில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்கியுள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“மோடியின் ஆணவத்தால் கடந்த முறை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர். தற்போது அது மீண்டும் அவர்களின் வாழ்க்கைக்கு எதிரியாகிவிட்டது.

“நட்பு ஊடகங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் பாஜகவிடம் விவசாயிகளின் கொலை பற்றிய கணக்கை ஒரு நாள் வரலாறு நிச்சயம் கோரும்,” என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்