மணீஷ் சிசோடியாவுக்கு பிணை; ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்தார்

1 mins read
e1342327-2ed5-49ba-8526-30385670c95b
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு மூன்று நாள் இடைக்காலப் பிணை வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவரது பிணை மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்த சூழலில், கடந்த ஒரு வருடமாக சிறைவாசம் அனுபவித்து வந்த சிசோடியா இப்போது வெளியே வந்துள்ளார்.

தனது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என மணீஷ் சிசோடியா மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி 13 முதல் 15ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக அமலாக்கத்துறை அவருக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்