‘பாரத் பருப்பு’ சராசரியாக 45,000 டன் விற்பனை

‘பாரத் பருப்பு’ சராசரியாக 45,000 டன் விற்பனை

1 mins read
840e2418-3f6b-4955-b940-3991ebe9aeea
பாரத் பருப்பு - படம்: இணையம்
Google News Preferred Icon

புதுடில்லி: விலைவாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘பாரத்’ என்ற பெயரில் கோதுமை மாவு, அரிசி விற்பனையுடன் கடலை பருப்பும் விற்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் அறிமுகமான இந்தப் பருப்பு 1 கிலோ பாக்கெட் ரூ.60 வீதம் விற்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக மாதம் 45 ஆயிரம் டன் என இதுவரை 2.28 லட்சம் டன் விற்பனையாகியுள்ளன.

30 கிலோ எடை கொண்ட பை, கிலோ ரூ.55 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த பாரத் அரிசி, பருப்பை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்