அசாமில் நடைபயின்ற அரிய வகை ‘தங்கப் புலி’

1 mins read
ec8b6aad-09fa-4302-a5aa-5189da3147ae
மாதிரிப்படம்: - பிக்சாபே

அசாம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தமது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அரிய வகைப் புலியின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

காஸிரங்கா தேசியப் பூங்காவில் ‘தங்க நிறப் புலி’ ஒன்று நடந்து செல்வதை அந்தக் காணொளி காட்டுகிறது.

அசாமின் வனவிலங்குச் சூழல் வியப்பளிக்கத் தவறுவதேயில்லை என்று முதல்வர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வனவிலங்குகளைப் படமெடுக்கும் கௌரவ் ராம்நாராயணன் எனும் புகைப்படக் கலைஞர் இந்த அரிய வகைப் புலியின் நடமாட்டத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிட்டும் அரிய வாய்ப்பு என்கிறார் இவர்.

ஜனவரி 24ஆம் தேதி அவர் அதைப் படமெடுத்ததாக ‘த இந்து’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

சென்ற ஆண்டும் இதேபோன்ற புலி காஸிரங்கா தேசியப் பூங்காவில் காணப்பட்டது. புத்தேஷ்வர் கொன்வார் என்பவர் தேசிய சுற்றுப்பயண தினத்தில் அதைப் படமெடுத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்