பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

1 mins read
e8c40758-cbf7-4cb0-9eac-8ae38cc777d6
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சண்டிகர்: நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதனால் இண்டியா கூட்டணியில் சல சலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும் என்று கூறியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் அத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துக் களமிறங்கும் என முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்