அயோத்தியில் குவிந்த பிரபலங்கள்

அயோத்தியில் குவிந்த பிரபலங்கள்

1 mins read
65a57925-7ff6-4dbc-96f4-02a073c7273d
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருகையளித்துள்ள திரைப் பிரபலங்கள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திரைப் பிரபலங்களும் விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அயோத்தியில் குவிந்தனர்.

அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனுஷ்கா சர்மா, அலியா பட், ரன்பீர் கபூர் உட்பட பலருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கங்கனா ரனாவத், அனுபம் கேர், அக்சய் குமார், விவேக் ஒபராய், ரஜினிகாந்த், தனுஷ், சங்கர் மகாதேவன், அனு மாலிக், பவன் கல்யாண் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் டோனி, விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஜடேஜா, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் ஸ்ரீராமரை தரிசிக்க அயோத்திக்கு வருகை அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்