4 வான்வழி இலக்குகளைத் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

4 வான்வழி இலக்குகளைத் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி

1 mins read
0313e77f-1091-4b4c-bf88-8e1800c89b32
ஆகாஷ் ஏவுகணை. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஒரே நேரத்தில் 4 வான்வழி இலக்குகளைத் தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி இந்திய விமானப் படையின் 25 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடிய ஆகாஷ் ஏவுகணையின் திறன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நான்கு வான்வழி இலக்குகளை ஒரே சமயத்தில் தாக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணையின் திறனை இந்தியா நிரூபித்துள்ளது என்றும் இத்தகைய திறனை வெளிப்படுத்தியுள்ள முதல்நாடு இந்தியாதான் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருவதாக துறைசார் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து டார்னிய 228 ரக விமானம், 155 மில்லி மீட்டர் பீரங்கித் துப்பாக்கிகள், பிரமோஸ் ஏவுகணைகள், சுரங்கப் பாதுகாப்பு – கவச வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள், இந்தியாவின் நட்பு நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்