பிபிசி ஊழியர்கள் இந்திய மொழிச் சேவைகளை வழங்கும் புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளனர்

பிபிசி ஊழியர்கள் இந்திய மொழிச் சேவைகளை வழங்கும் புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளனர்

1 mins read
f09e412e-04d6-4a96-81ee-d2ea771fc4c3
பிரிட்டிஷ் ஒளிபரப்பான பிபிசியின் ஊழியர்கள் இந்திய மொழிச் சேவைகளை வழங்கும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார்கள் - படம்:ரியூட்டர்ஸ்
Google News Preferred Icon

வெளிநாட்டு முதலீட்டு விதிகளுக்கிணங்கி, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசியின் ஊழியர்கள் இந்திய மொழிச் சேவைகளை வழங்கும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறார்கள் என்று டிசம்பர் 12ஆம் தேதி அன்று பிபிசி தெரிவித்தது.

மேலும் தற்போதைய பிபிசி இந்தியப் பிரிவின் தலைவர் ரூபா ஜாவும் நான்கு ஊழியர்களும் புதிய நிறுவனத்தை உருவாக்கி, பிபிசியால் நியமிக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்காக அமைப்பை விட்டு வெளியேறுவார்கள் என்றும் அது கூறியது .

பிபிசி ஒளிபரப்பு, வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம் தொடர்பான விதிமுறை மீறல்களுக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. வரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் பிப்ரவரி மாதத்தில் சோதனைகளை மேற்கொண்ட பிறகு, விசாரணைகளை உடனடியாகத் தொடங்கியது.

ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய விமர்சன ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியதற்குப் பின்னர், இந்திய அதிகாரிகள் இவ்வாறான நடவடிக்கையை எடுத்தார்கள்.

இந்தியாவில் செய்திகளை வெளியிடுவதை நிர்வகிக்கும் விதிமுறைகள் மாறிவிட்டன என்றும் இந்தியாவில் மின்னிலக்க முறை செய்தி உள்ளடக்கத்தை வெளியிடும் எந்த நிறுவனமும், இந்திய நாட்டினருக்குப் பெரும்பான்மை சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் பிபிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஜொனாதன் முன்ரோ ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்