வாகனங்களைப் பாதுகாக்க மேம்பாலத்தை நாடும் சென்னை மக்கள்

1 mins read
8a58a86c-636c-4980-8691-d50cec7c7aae
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள். - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மழைநீர் புகுந்தது. அங்கு கார்ப்பேட்டைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல குன்றத்தூரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்கும் வகையில் கார்கள், மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்திவைக்க அருகேயுள்ள மேம்பாலங்களை மக்கள் நாடி வருகின்றனர்.

இவ்வகையில் வேளச்சேரி புதிய மேம்பாலம் கார்ப் பேட்டையாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்