நல்வாழ்வு மையங்களின் பெயரை மாற்றம் செய்தது மத்திய அரசு

நல்வாழ்வு மையங்களின் பெயரை மாற்றம் செய்தது மத்திய அரசு

1 mins read
d098353d-b9b8-47c1-93bb-23bb52d39131
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், ‘ஆயுஷ்மான் பாரத் - சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

இப்போது, இந்த மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற அரசாங்கத் துறைகள், திட்டங்களின் பெயர்களை பாஜக அரசு இந்தியில் மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளும் இந்தி மொழிப் புழக்கம் இல்லாத மாநிலங்களும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்