ஆரத்தி எடுத்தவர்களுக்கு ரூ.4,000 வழங்கிய அமைச்சர் மீது வழக்கு

ஆரத்தி எடுத்தவர்களுக்கு ரூ.4,000 வழங்கிய அமைச்சர் மீது வழக்கு

1 mins read
713ed6e5-2d06-44d8-8f5b-0719fbed138e
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சத்யவதி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

மகபூபாபாத்: தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பில் வீடு, வீடாக வாக்கு சேகரிக்கப்பட்டது.

அப்போது, கொங்கர கித்தா எனும் கிராமத்தில் பிஆர்எஸ் வேட்பாளர் சங்கர் நாயக்குக்கு ஆதரவாக அமைச்சர் சத்யவதி வாக்கு சேகரித்தார்.

அப்பகுதி மகளிர் அணியினர், அமைச்சர் சத்யவதிக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது, ரூ.4 ஆயிரத்தை தட்டில் அன்பளிப்பாக வைத்தார் அமைச்சர்.

இதுகுறித்து, தேர்தல் கண்காணிப்புக் குழு கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டில் கூடுர் காவல்துறையினர் அமைச்சர் சத்யவதி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்