புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் இணையம் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஏலம் எடுக்கலாம்.
அந்தப் பொருட்களை ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை வாங்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்துக்கு செல்கிறது.
இப்போது 5வது சுற்றாக ஏலம் நடக்கிறது. அதில் 912 பரிசு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. ஏலம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31ஆம் தேதிவரை தொடரும். இந்தப் பரிசு பொருட்கள் டெல்லியில் நவீன கலை தேசிய அரங்கில் (என்ஜிஎம்ஏ) காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

