பெங்களூரு: விமானக் கழிவறையில் சிக்கிய 3.2 கிலோ தங்கம்

பெங்களூரு: விமானக் கழிவறையில் சிக்கிய 3.2 கிலோ தங்கம்

1 mins read
ecb4b10e-6f40-4f04-9a9b-31ae555cda17
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

பெங்களூரு: பெங்களூரின் கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் மாலத்தீவில் இருந்து வந்திறங்கிய விமானம் ஒன்றின் கழிவறையில் 3.2 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை காவல்துறையிடம் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தால் கடத்தல்காரர்கள் கழிவறையிலேயே விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

இன்னொரு சம்பவத்தில், மும்பை ஜாவேரி பஜாரில் காவல்துறை அதிகாள் நடத்திய அதிரடிச் சோதனையில் 8 கிலோ தங்கமும் 1.2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்க கடத்தல் கும்பலை பிடிக்கும் வகையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் மும்பை ஜாவேரி பஜாரில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் சோதனை நடத்தினர். முதலில் சோதனை நடத்திய இடத்தில் இருந்து அதிகாரிகள் ஒரு கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.

அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மற்றோர் இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு இருந்து 7 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளும் ரூ.1.22 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்தங்கம்