கேரளாவில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை

1 mins read
9ff205f2-735b-43a9-8ae5-d1d207c7a34d
திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே சேவை வழங்கும் வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது வந்தே பாரத் சேவை செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்திற்கும் காசர்கோட்டுக்கும் இடையே இயக்கப்படும் இரண்டாவது ரயில் சேவையை திரு மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா வழியாகச் செல்லும் இந்த ரயில் திங்கட்கிழமை தவிர வாரத்தின் இதர ஆறு நாள்களிலும் சேவை வழங்கும்.

கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் அது நின்றுசெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்