ஜி 20 மாநாட்டு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத்

ஜி 20 மாநாட்டு அழைப்பிதழில் இந்தியாவுக்குப் பதில் பாரத்

1 mins read
86fa29e2-dbed-49b6-96fe-e7fde587cb2d
இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்குப் பதில் பாரத் குடியரசுத் தலைவர் என ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஜி 20 மாநாட்டு விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்குப் பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்