ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் தர்சாலி பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக வந்த கார் மண்ணில் புதைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலை மண்ணில் புதைந்த காரை மீட்டனர். அந்தக் காரின் உள்ளே சிக்கி 5 பேர் மடிந்த நிலையில் இருந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. காரில் இருந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

