அந்தமான் நிகோபர் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

1 mins read
517d2a39-2d33-48de-9980-f9e38102b449
அந்தமான் நிகோபர் தீவு. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

போர்ட் பிளேர்: இந்திய அரசின் தீவுகளில் ஒன்றான அந்தமான் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை சரியாக 4.17 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்தமான் தீவுகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அந்தமான் நிகோபர் தீவு மக்கள் வியாழக்கிழமை முழுவதும் பெரும் பீதியில் உறைந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்