மகாராஷ்டிராவில் கனமழை: இருவர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கனமழை: இருவர் உயிரிழப்பு

1 mins read
2334bb88-fdf0-4b18-9fa8-1832d5b41b4e
மும்பையில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் பலவற்றில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கியுள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பை, பால்கர் ஆகிய நகரங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் ராய்காட், தானே ஆகிய நகரங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தானே, பால்கரில் கல்விக்கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. தானேயில் பல இடங்களில் மிதமானது முதல் அதி கனமழை வரை பெய்து வருகிறது.

மும்பை நகருக்குத் தண்ணீர் அளிக்கும் மொடக் சாகர் ஏரி வியாழக்கிழமை நிலவரப்படி நிரம்பி வழிந்து, தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மகாராஷ்டிர சுகாதாரத்துறை 500 பேர் அடங்கிய சுகாதாரக் குழு ஒன்றை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.

கனமழையால் நாக்பூரும் அதன் சுற்றுவட்டாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரத்தில் உள்ள 6 சிற்றூர்களில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

நாந்தெட் மாவட்டத்தில் இருவர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்