மகாராஷ்டிரா: பள்ளிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு

1 mins read
796a6cab-c92a-457d-ac5d-1b3089f29417
படம்: - தமிழ் முரசு

மும்பை: பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்த சம்பவம் மும்பையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாந்தெட் மாவட்டத்தின் கின்வாத் வட்டத்தில் உள்ள திக்டி தெண்டா என்னும் சிற்றூரில் உள்ள ஒரு பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது. அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் வகுப்பறைகள் யாவும் மூடப்பட்டிருந்ததால் அக்கரடியால் வகுப்பறைக்குள் நுழைய முடியவில்லை. அதனால் பள்ளி வளாகத்தில் இங்கும் அங்கும் நடந்து திரிந்தது. பின்னர் அங்கு சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காததால் மீண்டும் காட்டுக்குள் ஓடிச்சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் காட்டுப் பகுதி என்றும் அங்கு காட்டு விலங்குகளின் புழக்கம் அதிகம் என்றும் அவ்வட்டார மக்கள் தெரிவித்தனர். பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் காணொளியாக சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்