டெல்லி: பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பினய் குமார் சிங் தொடுத்த வழக்கில் பிரிட்டிஷ் ஊடகமான பிபிசி, விக்கிமீடியா ஃபவுண்டேஷன், இன்டர்நெட் ஆர்காய்வ்ஸ் ஆகியவற்றுக்கு புதிய அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படுவதால் டெல்லி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டலின்படி அழைப்பாணைகள் விடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி ரோகினி நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ருச்சிகா சிங்லா உத்தரவிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஜார்க்கண்ட் மாநில செயற்குழு உறுப்பினரான பினய் குமார் சிங், தடை செய்யப்பட்ட குஜராத் கலவரம் பற்றிய பிபிசி ஆவணப்படத்தை வெளியிட பிபிசி, விக்கிமீடியா ஃபவுண்டேஷன், இண்டர்நெர் ஆர்க்காய்வ்ஸ் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் புதிதாக அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு வரும் நவம்பர் 18ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, கடந்த மே 3 மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், தங்களுக்கு முறையான அழைப்பாணை விடுக்கப்படவில்லை என்றும் தங்கள் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் வாதிட்டனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிபிசி ஊடக நிறுவனம், ‘The Modi Question’ என்ற பெயரில் இரண்டு ஆவணப்படங்களை பிபிசி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
முதல் பகுதியில் பிரதமர் மோடியை குஜராத் கலவரத்துடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்ததுபோல இருந்தது.
2ஆம் பகுதியின் டெல்லி வன்முறை, காஷ்மீர் சிறப்புத் தகுதி, குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது.

