அமர்நாத் யாத்திரை: 40 உணவுப்பொருளுக்குத் தடை

அமர்நாத் யாத்திரை: 40 உணவுப்பொருளுக்குத் தடை

1 mins read
2fa8fc21-8219-4e4f-872b-8ae853483cfb
-
Google News Preferred Icon

காஷ்மீர்: அமர்நாத் யாத்திரை செல்வோர் பிரைடு ரைஸ், பூரி, பீட்சா புலாவ், பர்கர், பரோட்டா, தோசை, வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, துரித உணவுப் பொருட்கள், பானங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் தடை விதித்துள்ளது.

பக்தர்களின் ஆரோக்கி யத்தைக் கருதி எடுக்கப் பட்டுள்ள இந்த தடையை மீறி னால் அபராதம் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறி வித்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் தனித்துவமான வடிவத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடந்து வருகின்றனர்.

2023ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜுலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 62 நாள் களுக்கு நடைபெற உள்ளது.