குழந்தையின் உடலுறுப்புகள் தானம்

1 mins read
5a9e7254-a393-4093-ab6b-423dc53f1f47
-

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 18 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் இரண்டு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ஹரியானா மாநிலம், மேவாட் பகுதியைச் சேர்ந்த மஹிரா என்ற குழந்தை, அண்மையில் தன் வீட்டு பால்கனியில் இருந்து கீழே தவறி விழுந்து மூளைச் சாவு அடைந்தது.

இந்நிலையில், "மஹிராவின் கல்லீரல் ஆறு மாதக் குழந்தைக்கும் இரு சிறுநீரகங்கள் 17 வயது சிறுவனுக்கும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மஹிராவின் கருவிழிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன," என்று மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபக் குப்தா கூறியுள்ளார்.