விழுந்து நொறுங்கிய போர்விமானம்; விமானிகள் மரணம்

விழுந்து நொறுங்கிய போர்விமானம்; விமானிகள் மரணம்

1 mins read
961ae0c4-7cd8-4d31-80e2-c9b8aa6aa9dc
விமான விழுந்து நொறுங்கிய இடத்தில் தீ எரியும் காட்சி (படம்: இந்திய ஊடகம்) -
multi-img1 of 2
Google News Preferred Icon

இந்திய ஆகாயப்படையைச் சேர்ந்த ஒரு போர்விமானம், ராஜஸ்தான் பாலைவனத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியதில் விமானத்திற்குள் இருந்த இரு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்வித்யா பால், எம். ரானா ஆகியோர் மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது, எம்ஐஜி-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது. விமானம் விழுந்த இடத்தில் தீ கொளுந்துவிட்டும் எரியும் காணொளிகள் இந்திய ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று இந்திய ஆகாயப்படை கூறியது.

சென்றண்டு தொடக்கத்திலிருந்து ஆறு எம்ஐஜி-21 ரக விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இந்த சம்பவங்களில் ஐந்து விமானிகள் மாண்டுள்ளனர்.

இந்திய ஆகாயப்படை எம்ஐஜி-21 ரக விமானங்களை 1960களிலிருந்து பயன்படுத்திவருகிறது. கடந்த பல ஆண்டுகளான இந்த ரக விமானங்கள் பல விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில், அதன் விமானங்களை இந்திய ஆகாயப்படை புதுப்பித்து வருகிறது. அண்மையில் பிரான்சிலிருந்து ரபேல் போர்விமானங்களை இந்திய ஆகாயப்படை வாங்கியுள்ளது.