இந்தியாவில் அரிய டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு

இந்தியாவில் அரிய டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு

1 mins read
59913a86-4ea1-4c34-8b79-6558a2f45cd2
படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

இந்தியாவில் ஓர் அரிய டைனோசர் முட்டையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு டைனோசர் முட்டைக்குள் மற்றொரு முட்டை இருப்பது முதலன்முறையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பறவைகளிடையே தென்பட்டாலும், டைனோசர் போன்ற ஊர்வனயிடையே நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை.

மத்திய பிரதேசத்தில் உள்ள டைனோசர் தொல்பொருள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு நடந்தது. புதுடில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுப்பட்டிருந்தனர். இதுவரை ஆமை, முதலை, பல்லி போன்ற ஊர்வனயிடையே இதுபோன்ற முட்டையை யாரும் கண்டதில்லை. இந்தக் கண்டுபிடிப்பு மூலம் பரிணாமம் பற்றிய புதிய கேள்விகள் எழுந்துள்ளன. பறவைகளுக்கும் ஊர்வன விலங்குகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதை உறுதிசெய்ய இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமாக அமையும் என நம்பப்படுகிறது. இந்த முட்டையையிட்ட டைனோசர் வகை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்தன. இவற்றின் தொல்பொருள்கள் குஜராத், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.