புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதைப் பதிவு செய்யும் விதமாக நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு மில்லியன் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வங்கிக் கிளைகளில் பணிகள் முடங்கின.
வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்கும் முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

