மம்தா: மக்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறார் மோடி

மம்தா: மக்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறார் மோடி

1 mins read
4f7bddcf-5d37-4d6f-9e07-d3622377879a
மம்தா பானர்ஜி. படம்: ஊடகம் -
Google News Preferred Icon

கோல்­கத்தா: மேற்கு வங்க மக்­களை பாஜக பணம் கொடுத்து விலைக்கு வாங்க பார்ப்­ப­தாக அம்­மா­நில முதல்­வர் மம்தா பானர்ஜி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நந்­தி­கிராம் தொகு­தி­யில் பிர­சா­ரம் மேற்­கொண்ட அவர், பிர­த­மர் நரேந்­திர மோடி நிலங்­களை அப­க­ரிக்க முயற்சி செய்­வ­தா­க­வும் சாடி­னார்.

தொழி­ல­தி­பர் அதா­னி­யின் நண்­பரான பிர­த­மர் மோடி மக்­க­ளி­டம் இருந்து அனைத்­தை­யும் பறித்­துக் கொள்­வார் என்­றும், மேற்கு வங்க தேர்­த­லில் பாஜ­க­வால் வெற்­றி­பெற முடி­யாது என்­றும் மம்தா பானர்ஜி திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

"மேற்கு வங்க மாநி­லத்தை வெளி மாநி­லத்­த­வர்­க­ளால் ஒரு­போ­தும் ஆள முடி­யாது. முதற்­கட்­ட­மாக 30 தொகு­தி­க­ளுக்கு நடந்­துள்ள தேர்­த­லில் பாஜக 26 தொகு­தி­களில் வெற்­றி­பெ­றும் என உள்­துறை அமைச்­சர் அமித் ஷா சொல்­வதை ஏற்க இய­லாது," என்றார் முதல்­வர் மம்தா.

இதற்­கி­டையே நரேந்­தி­ர­பூர் பகு­தி­யில் 56 நாட்டு வெடி­குண்டு­களை மேற்­கு­வங்க போலி­சார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

தேர்­தல் நடை­பெற்று வரும் நிலை­யில் நரேந்­தி­ர­பூ­ரில் வெடி­குண்டு தயா­ரிக்­கப்­ப­டு­வ­தாக போலி­சா­ருக்கு ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து விரைந்து சென்ற காவல்­து­றை­யி­னர் அங்­குள்ள ஒரு குடிசை வீட்­டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாட்டு வெடி­குண்­டு­கள் சிக்­கின. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாநிலம் முழு­வ­தும் பாது­காப்பைப் பலப்­படுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.