கர்ப்பிணி மரணம்: மருத்துவர்களுக்கு 10 ஆண்டு சிறை

கர்ப்பிணி மரணம்: மருத்துவர்களுக்கு 10 ஆண்டு சிறை

1 mins read
Google News Preferred Icon

ஆங்கில மருத்துவம் பயிலாமல் சிகிச்சையளித்த இருவர் கைதாகினர்.

புனேயைச் சேர்ந்தவர் அனில். ஓட்டுநரான இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பிரசவத்துக்காக தன் மனைவி ராஜஸ்ரீயை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு ஜித்தேந்திரா (40 வயது), சச்சின் (39 வயது) ஆகிய இரு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மேலும் ஒரு மருத்துவரும் உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ராஜஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவர்கள் மீது அனில் போலிசில் புகார் அளிக்க, விசாரணையில் பிரசவம் பார்த்த இருவரும் ஆயுர்வேத மருத்துவம் மட்டுமே பயின்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததால் இருவரும் கைதாகினர்.