ஓணம் திருநாளில் அத்தப்பூ கோலத்துடன் வரவேற்பு

1 mins read
5caa7600-bfa3-4f5d-bd09-88639b8a10ea
படம்: தமிழக ஊடகம் -

தமிழ்நாட்டில் அறுவடைத் திருநாள் பொங்கல் என்று சிறப்பிக்கப்படுகிறது.

அதேபோல், கேரளாவின் அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.

தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, தோரணங்கள் கட்டி, வீடுகளில் மிகப்பெரிய விளக்கேற்றி மக்கள் கொண்டாடினர்.

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் குறிப்பாக கோவை, சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் களைகட்டியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்