இந்தியப் பெருங்கடலிலிருந்து சீனாவுக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணி

இந்தியப் பெருங்கடலிலிருந்து சீனாவுக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணி

1 mins read
a5df92f2-f725-40e1-918b-c6db101f5758
-
Google News Preferred Icon

இந்தியாவும் அமெரிக்காவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன.

தென் சீனக் கடற்பகுதியில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல முடிவதை உறுதி செய்யும் பயணத்தை முடித்துள்ள யுஎஸ்எஸ் நிமிட் போர்க்கப்பல் இந்தப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டது. தென் சீனக் கடலைவிட்டு மலாக்கா நீரிணை வழியாகச் சென்ற அந்தப் போர்க்கப்பலும் அதனுடன் சென்றிருந்த சில கப்பல்களும் இந்திய பெருங்கடலை நேற்று அடைந்தன.

இந்திய-சீன எல்லைப்பகுதியில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில் நடப்படும் இந்தப் பயிற்சி, சீனாவுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியத் தரப்பிலிருந்து பல்வேறு இந்தியப் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்துகொள்கின்றன.