வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா மனு

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா மனு

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் வதேரா வெளிநாடு செல்ல தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபார காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா நேற்று முன்தினம் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இன்று முதல் 2 வாரங்களுக்கு ஸ்பெயினில் தான் இருக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப் பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மனு தொடர்பாக இன்று பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.