ராபர்ட் வதேராவின் முன்பிணையை ரத்து செய்ய மனு

ராபர்ட் வதேராவின் முன்பிணையை ரத்து செய்ய மனு

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் முன்பிணையை ரத்து செய்யக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனுத் தாக்கல் செய்துள்ளது.

ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ள தாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1ஆம் தேதியன்று ராபர்ட் வதேரா, அவரது உதவி யாளர் மனோஜ் அரோரா ஆகி யோருக்கு நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கி டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், முன்பிணை காலத் தில் 2 பேரும் வெளிநாடு களுக்குச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வதேராவுக்கு வழங்கிய முன்பிணையை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களைக் கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப் பட்டுள்ள முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.