இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் அனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ள இலங்கை விருப்பம்

இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் அனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ள இலங்கை விருப்பம்

2 mins read
Google News Preferred Icon

இந்தியாவில் அகதிகளாக உள்ள தமது நாட்டவர் அனைவரும் நாடு திரும்ப இலங்கை விரும்புவதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் ஆஸ்டின் ஃபெர்னாண்டோ தெரிவித் துள்ளார். இரு தொடர்பாக விரைவிலேயே தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கு முகாமிட்டுள்ள அகதிகளைச் சந் திக்க இருப்பதாகவும் அவர் கூறி னார். இந்தியத் தலைநகர் புதுடெல்லி யில் வெளிநாட்டுச் செய்தியாளர் கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய திரு ஃபெர் னாண்டோ, தமிழகத்தில் கிட்டத்தட்ட நூறாயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளதாகக் குறிப்பிட் டார். கடந்த நவம்பர் மாதம் இந்தி யாவுக்கான தூதராகப் பொறுப் பேற்றுக்கொண்ட அவர் இதுவரை ஐயாயிரம் பேர் மட்டுமே தாயகம் திரும்பி தங்களது சொந்த ஊர் களைச் சென்று சேர்ந்திருப்பதாகக் கூறினார்.

"தற்போது நாட்டின் நிலைமை இயல்புநிலையில் தொடருவதால் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களை யும் நாங்கள் திரும்ப அழைத்துக் கொள்ள விரும்புகிறோம்," என்றார் அவர். பல்லாண்டு காலமாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந் தது. போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஏராளமான மக்கள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது தமிழகத்தின் ஏராளமான முகாம்களில் தங்கி உள்ள அவர்களில் 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரையிலான இலங் கைவாசிகள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டனர். அது போன்றவர்களைச் சந் தித்துப் பேச தாம் விரும்புவதாக திரு ஃபெர்னாண்டோ கூறினார். "நாடு திரும்ப விரும்புபவர்கள், விரும்பாதோர் ஆகியோரின் பிரச் சினைகளுக்குச் செவிமடுக்க நாடு தயாராக இருக்கிறது. இதை அவர் களிடம் நேரடியாகச் சொல்வோம். உங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று அவர்களிடம் தெரிவிப்போம்.