புதுடெல்லி: சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி-ஹரியானா எல்லையில் அமைந்துள்ள முங் கேஸ்வர் கிராமத்தில் உள்ள மதர் கசானி கான்வன்ட் பள்ளியில் பணிபுரிந்து வரும் இரு ஆசிரியர்கள் உட்பட மூவரை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய் துள்ளனர். குற்றப் பிரிவின் துணை போலிஸ் ஆணையர் அலோக் குமார் கூறும் போது, தாங்கள் ரிஷாப், ரோஹித் ஆகிய இரு ஆசிரியர்களையும் துணைப்பாட வகுப்பு பயிற்சி ஆசிரியர் தாபீக் என்ற தாக்கூரையும் கைது செய்துள்ளதாகக் கூறினார்.
கைதான இந்த ஆசிரியர்கள் தேர்வு எழுதுவதற்கான அந்த குறிப் பிட்ட நேரம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே முத்திரை யிடப்பட்ட கேள்வித்தாள் உரையைப் பிரித்ததாகவும் இது தொடர்பில் விசாரணை தொடர்வதாகவும் அவர் மேலும் கூறினார். முங்கேஸ்வர் கிராமத்தில் அமைந் துள்ள மதர் கசானி கான்வன்ட் பள்ளியில் இரு ஆசிரியர்களும் பணிபுரிந்து வந்தனர். தாக்கூர் பவானாவில் உள்ள அஸ்தால் காலணியில் ஒரு துணைப் பாட பயிற்சி வகுப்பு நிலையம் அமைத்து அங்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

