குஜராத் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

குஜராத் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

1 mins read
Google News Preferred Icon

டாகோட்: திருட்டு வழக்குத் தொடர்பாக துப்புத் துலக்கு வதற்காக குஜராத் மாநிலம் டாகோட் மாவட்டம் கிடகோட்டா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் கமாரா வையும் மற்றொருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலிசார் அவர்களைக் கடுமையாக அடித்து உதைத்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கணேஷ் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கணே‌ஷின் உடலைக் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.