முதல்வர் பழனிசாமி: கவிழ்ப்பு முயற்சிகள் தோல்வியையே சந்திக்கும்

2 mins read
0059145c-2274-48fe-a4ce-5a0105857121
-

திருவாரூர்: இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார். நடப்பு அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சிலர் முயற்சி செய்வ தாகக் குற்றம்சாட்டிய அவர், அத் தகைய முயற்சிகள் நிச்சயம் தோல்வியை மட்டுமே சந்திக்கும் என்றார். எத்தனை சோதனைகள் வந் தாலும் அவற்றைக் கண்டு தாம் அஞ்சப்போவதில்லை என்றார் முதல்வர் பழனிசாமி. ஜெயலலிதா வின் வழியில் பல்வேறு திட்டங் களைத் தமிழக அரசு செயல் படுத்திவருவதாக அவர் கூறினார். விவசாயிகள் பெருமையைப் பாடல்கள், திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர் என்று தெரிவித்த அவர், தவற்றைத் தட்டிக்கேட்கும் குணம்தான் எம்ஜிஆரை முதல்வர் ஆக்கியது எனக் குறிப்பிட்டார்.

எந்த பின்புலமும் இல்லாமல் உழைப்பால் முதல்வராக உயர்ந்தவர் ஜெயலலிதா என்றார். "தற்போது விவசாயிகளுக்குத் தேவையான அளவு பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில் வோரின் எண்ணிக்கை 44 விழுக் காடு அதிகரித்துள்ளது. அடிக்கடி டெல்லி சென்று பிரதமர் மோடி யைச் சந்தித்ததால்தான் தமிழகத் துக்கு அதிகளவு நிதி வழங்க அவர் ஒப்புதல் அளித்துள்ளார்," என்றார் முதல்வர் பழனிசாமி. இதற்கிடையே இன்று அமா வாசை என்பதால் இரு அணிகள் இணைப்பு குறித்து அதிகாரபூர் வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள தாக அதிமுக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. மேலும், துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப் படுகிறது. இதையடுத்து, அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்புக்கு அதிமுகவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.