2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: அபுதாபிக்குச் செல்லவிருந்த விமானத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருளைக் கடத்த இருந்த தென்னாப்பிரிக்க இளையரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஜோகன் என்ற அந்த நபரின் பெட்டியைச் சோதனை செய்தபோது அதில், மாத்திரை, பால் பவுடர் போன்று காட்சியளித்த பொருட்களை ஆய்வு செய்தபோது அவை ஹெராயின் போதைப்பொருள் என்பது உறுதியானது. இதையடுத்து ஜோகன் கைதானார்.