விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இளையர் கைது

விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இளையர் கைது

1 mins read
Google News Preferred Icon

சென்னை: விமானம் வழி இலங்கை தலைநகர் கொழும்பு வழி சென்னைக்கு ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்திய ஆந்திர இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பின்னணியில் தங்கக் கடத்தல் கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. காஜாசபீர் என்ற அந்த இளையர் தலா 100 கிராம் எடை கொண்ட 11 தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும் அவற்றின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.33 லட்சம் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஜாசபீர் கொண்டு வந்த ஃப்ளாஸ்க் ஒன்றின் எடை அதிகமாக இருக்கவே அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை சோதித்தபோது உள்ளுக்குள் தங்கக்கட்டிகள் மறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.