புதுடெல்லி: டெல்லி போலிசார் சிறுநீரக மோசடி தொடர்பில் வியாழனன்று நால்வரைக் கைது செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவங்களுக்கு மூளையாகக் கருதப்படும் ஸ்ரீகாந்த் சாஹூ என்ற நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் இந்த மோசடிக் கும்பல் சிக்கினர். புனே மாணவர் ஒருவர் சிறுநீரகம் பெறுவதற்காகப் பொய்யாக விரித்த வலையில் போலிஸ் அதிகாரிகளிடம் இந்தக் கும்பல் சிக்கியது. ஜெய்தீப் ஷர்மாவை 23, குற்றவாளி ஒருவர் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஆடவர் ஒருவருக்கு அவர் சிறுநீரகத்தை வழங்கவேண்டும் என்று குற்றவாளி கூறினார். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, சான்றிதழ்கள், பான் கார்டு அனைத்தும் போல்பேடி ஸ்நாய்னா பொத்மா போனி குமார் என்ற பெயரில் பொய்யாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
சிறுநீரக மோசடியில் நால்வர் கைது; கும்பல் தலைவனைக் காணவில்லை
1 mins read

