சகாயம்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான்

சகாயம்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை; சுதந்திர நாட்டில்தான்

1 mins read
6effbea9-9c6d-42cd-879b-d650de173e0b
-
Google News Preferred Icon

விருதுநகர்: சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை சுதந்திர நாட்டில்தான் நான் பயப்படுகிறேன் என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ். விருதுநகர் மகளிர் கல்லூரி ஒன்றில் நடந்த சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மாணவப் பருவம் மிகச்சிறந்த பருவம். இப்பருவத்தில் மாணவர் களுக் குத் தெளிவான இலக்கும் லட்சியமும் வேண்டும். இலக்கு உனக்காகவும் லட்சியம் சமூகத் திற் காகவும் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற எந்தச் சூழ் நிலையிலும் பின்வாங்காமல் செயல்பட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி னார். அதோடு, எந்தச் சூழ்நிலை யை யும் சமாளிக்கும் ஆற்றலை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வறுமையும் வெறுமை யும் உங்களை மாற்றக்கூடும். ஆனால், வெற்றிதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண் டும். ஆசிரியர்கள் மிகச்சரியான வழிகாட்டி. நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். சுடுகாட்டில் எனக்கு அச்சமில்லை. சுதந்திர நாட்டில்தான் பயப்படுகிறேன்.