இந்திய வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி கள்ளப்பணம்

இந்திய வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி கள்ளப்பணம்

1 mins read
Google News Preferred Icon

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வங்கிகளில் ஏராளமான கறுப்புப் பணம் போடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சந்தேகிப்பதாக மத் திய தொழிலாளர், கல்வி அமைச் சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரி வித்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் தேதி செல்லாது என்று அறி விக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதி வரையில் கிட்டத் தட்ட 97 விழுக்காடு பணம் அர சாங்கத்துக்குத் திரும்பி வந்தது. இருப்பினும் எஞ்சிய 3 விழுக்காடு ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை.