உத்தரப் பிரதேசம்: மதுரை ரயிலில் கொள்ளை முயற்சி

உத்தரப் பிரதேசம்: மதுரை ரயிலில் கொள்ளை முயற்சி

1 mins read
Google News Preferred Icon

சகாரன்பூர்: சண்டிகரில் இருந்து மதுரைக்குச் செல்லும் சென்னை விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு உத்தரப் பிரதேச மாநிலம் நக்வால்- டாப்ரி பகுதிக்கு இடையே சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிக்குள் இருந்த ஒரு கும்பல் திடீரென அவசரச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியது. ரயில் நின்ற தும் பயணிகளிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகைகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது அந்தக் கும்பல். ரயில் நின்றதால் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு ரயில்வே போலிசார் விரைந்து சென்று கொள்ளைக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க முயன்றனர். கொள்ளைக் கும்பலும் பதி லுக்கு துப்பாக்கியால் சுட இரு தரப்புக்குமிடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.

பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. சரியான நேரத்தில் ரயில்வே போலி சார் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்ததால் மிகப்பெரிய கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது. தங்களது உயிரும் உடைமைகளும் தப்பியதை எண்ணி பயணிகள் பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச மாநில போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது.