இந்திய கிரிக்கெட் அணியை கதிகலங்கச் செய்த பாலியல் பலாத்காரச் சம்பவம்

இந்திய கிரிக்கெட் அணியை கதிகலங்கச் செய்த பாலியல் பலாத்காரச் சம்பவம்

1 mins read
Google News Preferred Icon

இந்திய கிரிக்கெட் அணி ஸிம் பாப்வே சென்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்ன தாக முடிவடைந்த ஒருநாள் போட்டிகளும் டி20 போட்டிகளும் தலைநகர் ஹராரேயில் நடப்பதால் அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியினர் தங்கி இருந்தனர். இந்நிலையில், 'ஆப்பிரிக்கப் பெண் ஒருவரை இந்திய கிரிக் கெட் அணியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று நேற்று முன்தினம் ஸிம்பாப்வே ஊடகங்களில் செய்தி வெளி யானது.

இச்செய்தியைப் படித்ததும் இந்திய அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மறுப்புத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம் அந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும் கிரிக்கெட் அணியினர் எவரும் இதில் சம்பந்தப்பட வில்லை என்றும் கூறியது. இதற்கிடையே, பாலியல் பலாத் காரம் தொடர்பாக இரு இந்தியர் கள் கைது செய்யப்பட்டதாகக் கூறிய ஸிம்பாப்வே போலிசார் அவ்விருவரின் விவரங்களை வெளியிட்டனர்.