ஆட்சியில் இல்லாதபோது மட்டுமே பேசும் ஜெயா: கனிமொழி விமர்சனம்

ஆட்சியில் இல்லாதபோது மட்டுமே பேசும் ஜெயா: கனிமொழி விமர்சனம்

1 mins read
Google News Preferred Icon

தஞ்சை: தமிழக அரசு மதுக் கடைகளை மூடுவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத போதுதான் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவார் என்று விமர்சித்தார். "ஆட்சியில் இருக்கும்போது, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பதில்லை. அதுபோலவே அண்மையில் பிரதமரைச் சந்தித்த போதும், தமிழகம் எதிர்கொள்ளும் முக்கியமான பல பிரச்சினைகளை அவரிடம் எடுத்துக் கூறவில்லை. "எந்தெந்த மதுக்கடைகளை மூடப்போகிறோம் என்பதில் அரசிடம் தெளிவு இல்லை. மேலும், மதுக்கடைகளில் இரவு 10 மணிக்கு பிறகும் மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. மதுவிலக்குக் கொள்கை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது," என்று கனிமொழி (படம்) சாடினார்.