தமிழகத்தில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பிரபல புற்றுநோய் மருத்துவரான வி.சாந்தா கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், சுவாசக் கோளாறு, வாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகிவதாகக் கூறினார். "நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தில் 9ஆவது இடத்தில் இருந்த தமிழகம் இன்று முதலிடத்தை நோக்கிச் செல்கிறது. புகைபிடிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். "பள்ளி மாணவர்களிடம் நாம் புகையிலையின் தீங்குகளை உணர்த்த வேண்டும். இளைஞர்கள் அதிகளவு புகைக்கு அடிமையாவது கவலை அளிக்கிறது," என்றார் மருத்துவர் சாந்தா.