சென்னை: தேர்தலில் வாக்களிக்க பணம் பெறக்கூடாது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குகளை விற்பனை செய்யும் சூழலை பொதுமக்களே மாற்றிட வேண்டும் என்றார். "பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு முடிவெடுக்க வேண்டும். மேலும், அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மையாகச் செயல்படக் கூடியவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கு எந்தவித தயக்கமும் கூடாது," என்று சகாயம் மேலும் கூறினார்.
சகாயம்: நல்லவர்களை ஆதரியுங்கள்
1 mins read
-

