ஆந்திரா: திடீர் போராட்டம்; ரயில் எரிப்பால் பதற்றம்

ஆந்திரா: திடீர் போராட்டம்; ரயில் எரிப்பால் பதற்றம்

1 mins read
1d677f3f-ccc2-412c-b14e-87c989c9cea4
-
Google News Preferred Icon

விஜயவாடா: இட ஒதுக்கீடு கோரி காப்பு சமுதாயத்தினர் நடத்திய திடீர் போராட்டம் காரணமாக ஆந்திராவில் பதற் றம் நிலவுகிறது. போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் ஒரு காவல் நிலையம் தீக்கிரை யாக்கப்பட்டது. மேலும் ரயில் ஒன்றும் எரிக்கப்பட்டதால், பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்னர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ஆந்திர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களையும் சேர்க்க வேண்டு மென்பது காப்பு சமுதாயத்தினரின் நீண்ட நாள் கோரிக்கையாகும். நாயுடு பிரிவில் ஒன்றாகக் கருதப்படும் இச்சமுதாயத்தினர் தங்களது கோரிக்கையை வலியு றுத்தி அவ்வப்போது சிறிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியில் நேற்று முன்தினம் 'காப்பு கர்ஜனை' எனும் பெய ரில் இச்சமுதாயத்தினர் பிர மாண்ட மாநாட்டை நடத்தினர். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு அமைதியாக நடந்து முடிந்த போதிலும், மாலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காப்பு சமுதாயத்தினர், திடீரென ஒரு ரயிலுக்கு தீ வைத்தனர். துனி ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், விஜயவாடா, விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் ரத் னாஞ்சல் விரைவு ரயிலை மறித்தனர்.