சிலைகள் மீட்பு

சிலைகள் மீட்பு

1 mins read
33f079e3-ca8d-473b-8e4c-dfdebcc5cfd0
-
Google News Preferred Icon

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் மாதவபெருமாள் கோயில் அருகே பூமிக்கு அடியிலிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருவெற்றியூர் மாதவ பெருமாள் கோயிலின் திருப்பணிக்காக இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒன்றரை அடி நீள மாதவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உற்சவ மூர்த்திகளான இச்சிலைகள் விழா காலங்களில் பல்லக்கில் வீதி உலா எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

ஐம்பொன் சிலைகளை தாசில்தார் ராஜேஸ்வரி, காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து தொல்பொருள் ஆய்வுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.